அமெரிக்காவில் எந்தெந்த படிப்புகளை படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்? | Kalvimalar - News

அமெரிக்காவில் எந்தெந்த படிப்புகளை படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்?மார்ச் 18,2010,00:00 IST

எழுத்தின் அளவு :


அமெரிக்கக் கல்வி முறை ஆங்கில மொழியில் நடத்தப்படுவதால், டோபல் எனப்படும் டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் அஸ் எ பாரின் லாங்வேஜ் என்னும் ஆங்கிலத் திறனறியும் தேர்வில் வெற்றி பெறுவது மிக அடிப்படையான தேவையாகும். மேனேஜ்மென்ட் பட்ட மேற்படிப்பில் சேர விரும்புவோர் ஜிமேட் எனப்படும் கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்டில் வெற்றி பெறவேண்டும். பட்டப்படிப்புகளில் சேர விரும்புவோர் சேட் எனப்படும் ஸ்காலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்டில் தகுதி பெற வேண்டும். பிற படிப்புகளில் சேர ஜி.ஆர்.இ., எனப்படும் கிராஜுவேட் ரெகார்ட் எக்ஸாமினேஷனில் தகுதி பெற வேண்டும். நம் நாட்டு 3 ஆண்டு பட்டப்படிப்பு முடித்தவர் அங்கு நேரடியாக பட்ட மேற்படிப்பில் சேர முடியாது என்பது குறிப்பிடத் தக்கது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us